4 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேருக்கு இலவச முககவசம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்


4 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேருக்கு இலவச முககவசம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
x

சென்னையில் 4 மணி நேரத்தில் 67 ஆயிரம் பேருக்கு இலவச முககவசங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. எனவே முககவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை மீண்டும் தொடங்கி உள்ளது.

கொரோனாவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கையில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிர கவனம் செலுத்தி உள்ளது.

அந்த வகையில் சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் 50 ஆயிரம் பேருக்கு இலவச முககவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 'முககவசம், உயிர்கவசம்' என்ற வாசகம் பொறித்த 'டீ-சர்ட்' அணிந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு முககவசங்களை இலவசமாக வழங்கினார்.

இந்த விழிப்புணவர்வு நிகழ்ச்சியில் 4 மணி நேரத்தில் 67 ஆயிரத்து 500 இலவச முககவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார் உள்பட பல அதிகாரிகளும், தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.


Next Story