இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி தி.மு.க. வடக்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சங்கரன்கோவிலில் உள்ள 36 கிராம சேனை தலைவர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மருத்துவரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

முகாமில் பொது மக்களுக்கு சர்க்கரை நோய், பொது மருத்துவம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், இருதய நோய்கள், முதுகு வலி, மூட்டு தேய்மானம், மகளிர் நல ஆலோசனை உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு பாதிப்புள்ள நபர்களுக்கு இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டது.

முகாமில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட விவசாய அணி தலைவர் வெள்ளைத்துரை, ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் கே.எஸ்.எஸ்.மாரியப்பன், மருத்துவரணி துணைத் தலைவர் பேச்சியம்மாள், மருத்துவ அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார், மருத்துவர்கள் மணிகண்டன், சுமதி, சத்தியபாலன், செல்வமாரி, பேச்சியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Next Story