இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 9 Oct 2023 12:30 AM IST (Updated: 9 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன், துளிர் பிசியோதெரபி மறுவாழ்வு சிகிச்சை மையம் இணைந்து இலவச பிசியோதெரபி மருத்துவ முகாமை புளியங்குடி சிந்தாமணி கண்ணா மருத்துவமனையில் நடத்தியது. பவுண்டேஷன் நிறுவனர் அ.ஆனந்தன் தலைமையில், அதிநவீன கருவிகளை அனுபவம் மிக்க மருத்துவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

டாக்டர்கள் ஜெபன், கல்காமி சங்மா, உதவியாளர் புவனா, மற்றும் முத்துக்குமார், வக்கீல் வீர புத்திரன், அக்சயா பாத்திரம் ராமர், வாசுதேவநல்லூர் சின்னராசு, அப்துல் கலாம் சேவை அமைப்பு தலைவர் கற்பகராஜ், மருதம் பயிற்சி மையம், அறக்கட்டளை நிர்வாகிகள் கார்த்தி, கோபி, முத்துராஜ், பொதிகை உதவும் கரங்கள் திருமலை, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை கார்த்திக் பாண்டியன், அக்சய பாத்திரம் அறக்கட்டளை சண்முகராஜ், சங்கரநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Next Story