இலவச மருத்துவ முகாம்


இலவச மருத்துவ முகாம்
x

பேட்டையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டை அருகே மேல திருவேங்கடநாதபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ் ராதாஸ்வாமி அசோசியேசன் சார்பில் பேட்டை நாடார் சமுதாய நலக்கூடத்தில் ஹோமியோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவ வல்லுனர் குழு ஒருங்கிணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தியது. பேட்டை நாடார் முன்னேற்ற சங்க தலைவர் ஹாரிஸ் நாடார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஸ்ரீதர் ராஜன் முன்னிலை வகித்தார். சங்க செயலர் பிரம்மநாயகம் வரவேற்றார். துணைச் செயலர் சந்திரன் வாழ்த்தி பேசினார். ஆயுர்வேதிக் மருத்துவர்கள் ஈஸ்வரி, சப்தா, ஹோமியோபதி மருத்துவர் அப்துல் ரசாக், சித்தா மருத்துவர் சீதா ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் நாள்பட்ட சளி, இருமல், மூட்டு வலி, சரும பிரச்சினை, வாத நோய், கை கால் வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான இலவச சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மருத்துவ ஒருங்கிணைப்பாளர் தங்கையா செய்திருந்தார்.


Next Story