இலவச மருத்துவ பரிசோதனை முகாம்


இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

தென்காசி

தென்காசி மீரான் மருத்துவமனை மற்றும் குற்றாலம் அருவி ரோட்டரி சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று தென்காசி அருகே உள்ள இலஞ்சி ஐ.சி.ஈஸ்வரன் பிள்ளை தொடக்க பள்ளியில் நடைபெற்றது.

முகாமை இலஞ்சி நகர பஞ்சாயத்து தலைவி சின்னதாய் தொடங்கி வைத்தார். மீரான் மருத்துவமனை சிறப்பு டாக்டர் முகம்மது மீரான் தலைமையில் டாக்டர்கள் அப்துல் அஸீஸ், ஆனந்த் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் முன்னாள் ரோட்டரி கவர்னர் ஷேக் சலீம், அருவி ரோட்டரி சங்க தலைவர் சங்கர சுப்பிரமணியம், செயலாளர் பால்ராஜ், நகர பஞ்சாயத்து துணை தலைவர் முத்தையா, பள்ளியின் செயலர் ஐ.ஏ.சிதம்பரம், குற்றாலம் கவுன்சிலர் கிருஷ்ணராஜா, சதாசிவம், அன்னமராஜா, சந்திரன், பார்வதி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள் மேல் சிகிச்சை பெற மீரான் மருத்துவமனை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை பெற பரிந்துரை செய்யப்பட்டது.


1 More update

Next Story