இலவச நீட் பயிற்சி மையம் தொடக்க விழா
பாவூர்சத்திரத்தில் இலவச நீட் பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கனி மார்க்கெட் ஷாப்பிங் காம்ப்ள்க்ஸ் மற்றும் மதிரா டியூசன் சென்டர் இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதலாக நீட் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரா. அருள்குமார் வரவேற்றார். அடுத்ததாக காமராஜர் மார்க்கெட் தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடக்க உரையாற்றி இலவச நீட் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.
இதில் புல்லுக்காட்டுவலசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், அயன் குறும்பலாபேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் சிறப்புறையாக சேவியர் இருதயராஜ் மாணவர்களுக்கு நீட் பயிற்சியை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என விளக்கமளித்தார். டாக்டர். சுபஜோதி குமார், கனகசபாபதி, பிரபாகர் ஆகியோர் நீட் பயிற்சி பற்றி விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் அயன் குறும்பலாபேரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர் சிங் சிறப்புறையாற்றினர். மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். சுப்பிரமணியன், வட்டார காங்கிரஸ் தலைவர் கே.பி.குமார் பாண்டியன், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் ஏ.பி.பாலசுப்ரமணியன், கோல்டன் செல்வராஜ், அருணோதயம், எஸ்.பி.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.