அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி
ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை,
ஆற்றுப்படை அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முதல் தொகுதி பயிற்சி வகுப்புகள் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் தொகுதி பயிற்சி வகுப்புகளுக்கான தகுதித் தேர்வு சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தகுதித்தேர்வு எழுதினர்.
இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து பேட்டியளித்த ஆற்றுப்படை அறக்கட்டளை நிறுவனர் கார்த்திகேயன், அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வை முன்னிட்டு பயிற்சி வகுப்புகளை மீண்டும் தொடங்கி இருப்பதாகவும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி கிடைப்பதற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி வருவதாகவும் கூறினார்.
Related Tags :
Next Story