கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு பதிவு செய்ய 20-ந்தேதி கடைசி நாள்


கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில்  சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச மாதிரி தேர்வு  பதிவு செய்ய 20-ந்தேதி கடைசி நாள்
x

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இலவச மாதிரி தேர்வு எழுத பதிவு செய்ய வருகிற 20-ந்தேதி கடைசி நாளாகும்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு 444 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட போட்டித் தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வருகிற 20-ந் தேதி மற்றும் 21-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இம்மாதிரி தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது நுழைவுச் சீட்டு நகல் மற்றும் புகைப்படத்துடன் 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி 18/63 நேப்பால் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


Next Story