இலவச தையல் எந்திரம் வழங்க வேண்டும்
விதவை பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க இலவச தையல் எந்திரம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் தையல் கலைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
விதவை பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க இலவச தையல் எந்திரம் வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் தையல் கலைஞர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
இலவச தையல் எந்திரம்
விருதுநகர் மாவட்ட தையல் கலைஞர் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய பெண்கள் மற்றும் விதவை பெண்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திட இலவச தையல் எந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
அதேபோல விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், தேசிய குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில், வத்திராயிருப்பு பகுதியில் மீன் பாசி ஏலம் விட்ட கண்மாய்களில் நீதிமன்ற நடவடிக்கையை சுட்டிக்காட்டி மீன்வளத் துறையினர் ஏலத்தை ரத்து செய்து விட்டனர். இந்தநிலையில் ஏற்கனவே ஏலம் எடுத்தவர்கள் கண்மாய்களில் மீன் குஞ்சை விலைக்கு வாங்கி விட்டுள்ள நிலையில் தற்போது அந்த மீன்களை அவர்கள் பிடித்துக் கொள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
வீட்டுமனைப்பட்டா
விருதுநகர் மத்திய மாவட்டம் மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ள மனுவில் ஓ.கோவில்பட்டி கிராமத்தில் ஏழ்மை நிலையில் உள்ள ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.