சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - ஒருவர் பலி
சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் கூலி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 35) கூலி வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கெட்டிசெவியூர் நம்பியூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மரத்துகருப்பராயன் கோவில் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று மோட்டர் சைக்கிள் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிக்ச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் வேன் டிரைவர் பாலகுமார் மற்றும் அவரது மனைவி லோகேஷ்வரி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சிறுவலூர் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.