திருத்தணியில் ரெயில்வே கேட் அடிக்கடி பழுது; பொதுமக்கள் அவதி


திருத்தணியில் ரெயில்வே கேட் அடிக்கடி பழுது; பொதுமக்கள் அவதி
x

திருத்தணியில் ரெயில்வே கேட் அடிக்கடி பழுதாகி விடுகிறது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.

திருவள்ளூர்

திருத்தணி, கந்தசாமி தெருவில் 2-வது தானியங்கி ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் வழியாக சார்-பதிவாளர் அலுவலகம், கிளை சிறைச்சாலை, ஜோதிசாமி தெரு, கலைஞர்நகர், முருகப்பநகர், பெரியதெரு, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தானியங்கி ரெயில்வே கேட்டை முறையாக பராமரிக்காததால் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதை பழுது பார்ப்பதற்கு குறைந்த பட்சம் 2 நாட்களுக்கு மேல் ஆகிவிடுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. சில வாகன ஓட்டிகள் தங்களது வாகங்களை ஆபத்தான முறையில் கேட் கீழே தள்ளி கடக்கின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ரெயில்வே நிர்வாகம் இனிவரும் காலங்களிலாவது தானியங்கி ரெயில்வே கேட்டை முறையாக பராமரித்து பழுது ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story