ஆறுமுகநேரி, குரும்பூரை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:29+05:30)

ஆறுமுகநேரி, குரும்பூரை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி

ஆறுமுகநேரி ராஜமணியபுரத்தை சேர்ந்த சூசைராஜ் மகன் பிரதீப் என்ற அந்தோணிபிரதீப் (வயது 20), ஆறுமுகநேரி காமராஜபுரத்தை சேர்ந்த திலகர் மகன் அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை (19) ஆகியோர் தனியார் தொண்டு நிறுவன உரிமையாளரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஆறுமுகநேரி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதே போன்று குரும்பூர் அழகப்பபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துக்குமார் என்ற மதுரை முத்து (32) என்பவரை கொலை முயற்சி வழக்கில் குரும்பூர் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், பிரதீப் என்ற அந்தோணிபிரதீப், அலெக்ஸ் ரூபன் என்ற பப்பை, முத்துக்குமார் என்ற மதுரைமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.


Next Story