பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி பகல் 11 மணிக்கு கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு கடந்த 20-ந் தேதி இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 21-ந் தேதி வினாடிக்கு 1,350 கன அடியாகவும், 23-ந் தேதி மதியம் 2 மணிக்கு வினாடிக்கு 1,500 கன அடியாகவும், 24-ந் தேதி மாலை 4 மணிக்கு வினாடிக்கு 1,800 கன அடியாகவும் அதிகரித்து திறக்கப்பட்டது.

2,300 கன அடி

பின்னர் 26-ந் தேதி மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடியும், நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடியும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிகபட்ச அளவாக நேற்று மதியம் 2 மணி அளவில் கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மாலை 4 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 80.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 346 கன அடி தண்ணீர் வந்தது. பவானி ஆற்றில் வினாடிக்கு 1,100 கன அடியும் திறக்கப்பட்டது.


Next Story