ஜப்பான், கொரியாவில் இருந்து வந்த 4 பேருக்கு கொரோனா பரிசோதனை
ஜப்பான், கொரியாவில் இருந்து வந்த 4 பேருக்கு ேகாவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஜப்பான், கொரியாவில் இருந்து வந்த 4 பேருக்கு ேகாவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பரவல்
கோவை மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் மற்றும் 2-வது அலையில் ஆயிரக் கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
கோவையில் தற்போது வரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 138 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டனர். தொற்றில் இருந்து 3 லட்சத்து 38 ஆயிரத்து 517 பேர் குணமடைந்தனர். கொரோனா விற்கு 2,618 பேர் பலியாகி உள்ளனர்.
இதையடுத்து கொரோனா அலை ஓய்ந்ததால் அனைத்து தரப்பினரும் நிம்மதியில் இருந்தனர். இந்த நிலையில் புதிய வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் பல்வேறு நாடுக ளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பரிசோதனை கட்டாயம்
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் கோவை வரும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் அடிப்படை யில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா, ஹாங் காங் ஆகிய 5 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக் கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அதன்படி ஜப்பான், கொரியாவில் இருந்து கோவை வந்த 4 பேருக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உறுதி செய்யப்பட வில்லை
கோவை விமான நிலையத்திற்கு ஜப்பானில் இருந்து 3 பேரும், கொரியாவில் இருந்து ஒருவரும் வந்தனர். அவர்கள் 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 2 பேருக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்தது. மற்ற 2 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவு நாளை (இன்று) தெரிய வரும்.
சீனா, ஜப்பான், தாய்லாந்து, கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுக ளில் இருந்து கொரோனா அறிகுறியுடன் வருபவர்களை மட்டுமே தனிமைப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
தற்போது வந்த 4 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை. கோவை விமான நிலை யத்தில் இதுவரை 169 பேருக்கு கொரோனா பரிசோதனை செய் யப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.