'திராவிடம்' 'தமிழ்நாடு' 'தமிழன்' 'சமூகநீதி''தமிழ்த் தேசியம்' ஒற்றைச் சொல் டிரெண்டிங்கில் தமிழக அரசியல் தலைவர்கள்


திராவிடம் தமிழ்நாடு தமிழன் சமூகநீதிதமிழ்த் தேசியம் ஒற்றைச் சொல் டிரெண்டிங்கில் தமிழக அரசியல் தலைவர்கள்
x

டுவிட்டரில் டிரெண்டாகும் 'ஒற்றைச் சொல் டுவீட்'டில் முதல் அமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி , சசிகலா உள்பட தமிழக அரசியல் தலைவர்களும் இணைந்துள்ளனர்.

சென்னை

டுவிட்டரில் டிரெண்டாகும் 'ஒற்றைச் சொல் டுவீட்'டில் முதல் அமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி , சசிகலா உள்பட தமிழக அரசியல் தலைவர்களும் இணைந்துள்ளனர்.

அமெரிக்காவின் 'அம்ட்ராக்' என்ற ரயில் சேவை நிறுவனம் 'trains' என ஒற்றை வார்த்தையில் டுவீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றைச் சொல்லில் டுவீட் செய்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 'democracy' (ஜனநாயகம்) எனவும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 'கிரிக்கெட்' எனவும் பதிவிட்டுள்ளனர். அதுபோல நாசா, 'universe' (பிரபஞ்சம்) என பதிவிட்டுள்ளது.

இதுபோல தமிழக அரசியல் தலைவர்களும் இந்த டுவிட்டர் டிரெண்டிங்கில் இணைந்துள்ளனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'திராவிடம்' எனப் பதிவிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 'தமிழ்நாடு' எனவும்

பா.ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை 'தமிழன்' எனவும்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 'சமூகநீதி' எனவும்

சசிகலா, 'ஒற்றுமை' எனவும்

டிடிவி தினகரன், 'அம்மா' என்றும்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழ்த் தேசியம்' என்றும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் 'மக்கள்'

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ 'மனிதநேயம்' என்றும் பதிவிட்டுள்ளனர்.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் - 'வறுமை ஒழிப்பு'

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் - சனநாயகம்அதிமுக டுவிட்டர் கணக்கில் - 'எடப்படியார்'

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் - 'வீரப்பெண்மை'

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் - 'சமத்துவம்' என்றும் டுவீட் செய்துள்ளனர்.

1 More update

Next Story