நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாகவேளாங்கண்ணி செல்லும் வாராந்திர ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாகவேளாங்கண்ணி செல்லும் வாராந்திர ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
x

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வாராந்திர ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

மதுரை


தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தின் சார்பில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயிலில், பயணிகளின் வசதிக்காக கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ரெயிலில் (வ.எண்.06037/06038) 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இரு மார்க்கங்களிலும் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ரெயிலில், 2 இரண்டடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 4 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொதுப்பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமை தோறும் மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு காலை 11.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடைகிறது. ரெயில், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story