பெட்ரோல் போடுவது போல நடித்து ரூ. 25 ஆயிரம் கொள்ளை - ஹெல்மெட் ஆசாமி கைவரிசை


பெட்ரோல் போடுவது போல நடித்து ரூ. 25 ஆயிரம் கொள்ளை - ஹெல்மெட் ஆசாமி கைவரிசை
x

சாலிகிராமம்-ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மர்மநபர் ஒருவர் ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடி சென்றவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை

போரூர்:

சென்னை நெசப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 25). சாலிகிராமம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்று இரவு 10.30 மணி அளவில் பெட்ரோல் போடும் பணி முடிந்து பணத்தை கணக்கு பார்த்தார். பின்னர் தனது கைப்பையை மேஜையில் வைத்துவிட்டு அருண் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தார்.

அப்போது ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட வந்த வாலிபர் திடீரென அருணின் கவனத்தை திசை திருப்பி ரூ. 25ஆயிரத்து 600 ரொக்கத்துடன் கைப்பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

கண் முன்னே பணப்பை பறிபோனதால் பங்க் ஊழியர் அருண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கைவரிசை காட்டி தப்பிய மர்ம வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story