தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலம் 1,307 டன் யூரியா உரம் ஈரோடு வந்தது
யூரியா உரம் ஈரோடு வந்தது
ஈரோடு
கிரிப்கோ உர நிறுவனம் சார்பில், ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான 1,307 டன் யூரியா உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் ஈரோடு வந்தது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய ஈரோடு கிளை நிறுவடத்தில் உள்ள பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வினியோகிக்க ஈரோட்டில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. விவசாயிகள் இந்த உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பெற்று பயன் பெறலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story