கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு - வெப்பநிலை 6 டிகிரியாக குறைவு


கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு - வெப்பநிலை 6 டிகிரியாக குறைவு
x

டிசம்பர் இறுதி வரை பருவமழை நீடித்ததால், கொடைக்கானலில் சற்று தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியுள்ளது.

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் மார்ச் வரை உறைபனி சீசன் நீடிப்பது வழக்கம். கடந்த ஆண்டு பருவமழையின் தாக்கம் டிசம்பர் இறுதி வரை நீடித்ததால், கொடைக்கானலில் சற்று தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியுள்ளது.

கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள புல்வெளிகள் அனைத்தும் வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கின்றன.

இதனிடையே கொடைக்கானலில் நேற்று இரவு 10 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவான நிலையில், இன்றைய தினம் 6 டிகிரி செல்சியசாக குறைந்துள்ளது. உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. அடுத்த சில நாட்களுக்கு உறைபனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story