பழ வியாபாரி அடித்துக்கொலை


பழ வியாபாரி அடித்துக்கொலை
x
சென்னை

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், ஐயர் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 70). சேலையூர் பகுதியில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார்.

கடந்த 6-ந்தேதி சேலையூர், அகரம் மெயின் ரோடு புது நகரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது போதையில் பழம் வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன்(42) மற்றும் வெங்கடேசன் ஆகியோர் அய்யனாருடன் தகராறு செய்தனர்.

இதில் ஆத்திரம் அடைந்த முருகன், பழ வியாபாரி அய்யனாரை காலால் வயிற்றில் எட்டி உதைத்தார். இதில் படுகாயம் அடைந்த அய்யனார், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி சேலையூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story