குடும்பத் தகராறில் மனவிரக்தி: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத் தகராறில் மனமுடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகர் கம்மவார் பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் பழனிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கன்னையா நகர், அலமேலம்மாள் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (63). கூலித்தொழிலாளியான இவர், கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்படவே, வலிதாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த 2 சம்பவங்கள் குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.