வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 31 குழுக்களுக்கு ரூ.23¼ லட்சம் நிதி மானியத்தொகை


வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம்  31 குழுக்களுக்கு ரூ.23¼ லட்சம் நிதி மானியத்தொகை
x

வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் 31 குழுக்களுக்கு ரூ.23¼ லட்சம் நிதி மானியத்தொகை அமைச்சர் காந்தி வழங்கினார்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், காவேரிப்பட்டணம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஒன்றியங்களில் உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் குழுக்கள் ஆகியவை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

இந்த குழுக்களுக்கு தொடக்க நிதி மானியம் வழங்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், டி.மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தலா ரூ.75 ஆயிரம் வீதம் 31 உற்பத்தியாளர் மற்றும் தொழில் குழுக்களுக்கு ரூ.23 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தொகை வழங்கினார். மேலும் 2 புதிய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் சதீஸ்குமார், மாவட்ட செயல் அலுவலர் தமிழ்மாறன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, முன்னாள் எம்.பி.க்கள் சுகவனம், வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், நகராட்சி தலைவர் பரிதா நவாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story