ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்


ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்
x

நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

ஜல்லிக்கட்டு போட்டி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பள்ளபட்டி கிராமத்தில் உள்ள அய்யனார், அரியசுவாமி கோவில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் தொடங்கி வைத்தார். திருச்சுழி தாசில்தார் சிவகுமார் முன்னிலை வகித்தார்.

மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 400 காளைகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 353 காளைகள் பங்கேற்றன. மேலும், 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

ரொக்கப்பரிசு

1 மணி நேரத்திற்கு 25 வீரர்கள் என 6 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன் ஆகியோரது தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story