குளச்சலில் சூறைக்காற்றால் கடல் சீற்றம்


குளச்சலில் சூறைக்காற்றால் கடல் சீற்றம்
x

சூறைக்காற்றால் குளச்சலில் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கன்னியாகுமரி

குளச்சல்,

சூறைக்காற்றால் குளச்சலில் கடல் சீற்றமாக இருந்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

குளச்சல் மீனவர்கள்

குமரி மாவட்டம் குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3000-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் வள்ளம், கட்டுமர படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவிவரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மீனவர்கள் 3 நாட்களுக்கு லட்சத்தீவு மற்றும் கேரளா கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்தநிலையில் நேற்று குளச்சல், முட்டம், மண்டைக்காடு, குறும்பனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசியது. மேலும் அவ்வப்போது மழையும் பெய்தது. இதனால் குளச்சல் கடல் பகுதியில் அலையின் ஆக்ரோஷமும் அதிகமாக இருந்தது.

எனவே கடல் சீ்ற்றத்தின் காரணமாக பாதுகாப்பு கருதி குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 3000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர படகு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.


Next Story