தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள்: பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி


தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள்: பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி
x

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பை அடுத்து பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை,

2023 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து , முதல் -அமைச்சரின் கோரிக்கையை ஏற்று கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கேலோ இந்தியா போட்டிகள் நடத்த தகுதியான முறையில் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி, மாண்புமிகு முதல்-அமைச்சர் மற்றும் மாண்புமிகு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்தாகூர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கேலோ இந்தியாவை சிறப்பான முறையில் நடத்தும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



Next Story