திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது
திருக்கோவிலூர் அருகே பணம் வைத்து சூதாடியவர் கைது செய்யப்பட்டாா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள முருக்கம்பாடியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முருக்கம்பாடி வனப்பகுதியில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 7 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்ற 6 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் பெருமணம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகன் மணிகண்டன்(வயது 26) என்பது தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 6 மோட்டாா் சைக்கிள்கள், ரூ.150 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.