பணம் வைத்து சூதாட்டம்; 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


பணம் வைத்து சூதாட்டம்; 9 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பணம் வைத்து சூதாட்டம் ஆடியது தொடர்பாக 9 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பிரதிவிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காலனி தகன மேடை அருகில் 10-க்கும் மேற்பட்டோர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதையடுத்த அங்கிருந்த 9 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story