முஸ்லீம்களே வசிக்காத ஊரில் இந்துக்கள் நடத்தும் 'கந்தூரி விழா' - மத நல்லிண பூமியாக விளங்கும் கிராமம்...!


முஸ்லீம்களே வசிக்காத ஊரில் இந்துக்கள் நடத்தும் கந்தூரி விழா - மத நல்லிண பூமியாக விளங்கும் கிராமம்...!
x

நெல்லை மாவட்டம், தெற்கு விஜயநாராயணத்தில் உள்ள மேத்தப்பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழாவை இந்து மக்கள் முன்னின்று நடத்தினர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம், தெற்கு விஜயநாராயணத்தில் உள்ள மேத்தப்பிள்ளை அப்பா தர்கா கந்தூரி விழாவை இந்து மக்கள் முன்னின்று நடத்தினர். தெற்கு விஜய நாராயணம் கிராமத்தில் முஸ்லீம்கள் ஒருவர் கூட வசிக்காத நிலையில், அங்குள்ள மேத்த பிள்ளை அப்பா தர்காவில் வழக்கம் போல இந்த வருடமும் கந்தூரி விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமானோர் வருகை தருகிறார்கள். இவர்களுக்கு அங்குள்ள இந்து மக்கள் தங்களது வீட்டின் ஒரு பகுதியை தங்குவதற்கு அளித்து உதவுகின்றனர். கந்தூரி விழாவையொட்டி கொடிக்கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. வழி நெடுகிலும் இந்துக்கள் வரவேற்று வழிபாடு செய்தனர்.

இந்த விழாவில் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முஸ்லீம்களே வசிக்காத ஊரில் இந்துக்கள் நடத்தும் 'கந்தூரி விழாவால் தெற்கு விஜயநாராயணம் மத நல்லிண பூமியாக விளங்கும் கிராமமாக உள்ளது.


Next Story