விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x

கலவை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

கலவை போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் கள்சரவணமூர்த்தி, சங்கர் பாபு ஆகி.யோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் 5 பேர் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும், சிலை வைக்கும் இடத்தில் எளிதில் தீ பிடிக்கும் பொருட்களை அகற்ற வேண்டும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் விநாயகர் சிலையை வைக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story