விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்


விநாயகர் சிலைகள் விற்பனை அமோகம்
x

விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடக்கிறது.

திருச்சி

துறையூர்:

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துறையூரில் ஆத்தூர் சாலையோரத்தில் அரை அடி முதல் 9 அடி வரை பலவிதமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு, அவற்றுக்கு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் வல்லப கணபதி, ராஜ கணபதி, வெற்றி கணபதி, வீர கணபதி உள்ளிட்ட பல்வேறு விதமான விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.

விற்பனை

அவற்றை இளைஞர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர். இதில் 150 ரூபாயில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையிலான சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக உள்ளது.


Next Story