திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து முன்னணி திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி கோட்ட செயலாளர் போஜராஜன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு இந்த ஆண்டு திருச்சி மாநகரில் 500 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story