பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம்


பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம்
x

பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

பெரம்பலூர்

விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலம்பெரம்பலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் இந்து முன்னணி சார்பில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் நடக்கிறது. இந்த ஊர்வலம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் இருந்து புறப்பட்டு காமராஜர் வளைவு வடக்கு மாதவி சாலை, சாமியப்பா நகர், எளம்பலூர் சாலை, காமராஜர் சிக்னல், சங்குப்பேட்டை, கடைவீதி வழியாக சென்று காந்தி சிலையை அடைகிறது. அங்கு சேகரிக்கப்படும் விநாயகர் சிலைகள் அதன் பிறகு திருச்சிக்கு சரக்கு வாகனங்களில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளதால், பக்தர்கள் தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை சரக்கு வாகனங்களில் கொடுக்கலாம் என்று இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story