விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு-வாய்க்காலில் கரைக்கப்பட்டன.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர், திருமக்கோட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆறு-வாய்க்காலில் கரைக்கப்பட்டன.

கூத்தாநல்லூர்

விநாயகர் சதுர்த்தியையொட்டி கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள கோவில்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்து வந்தது. பின்னர் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வெண்ணாறு, வெள்ளையாறு, கோரையாறுகளில் கரைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சக்தி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.

ஊர்வலம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, அதங்குடி, மரக்கடை, தோட்டச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று விநாயகர் சிலை வெண்ணாற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டையில் மகாமாரியம்மன் கோவில் மண்டபத்தில் விஸ்வரூப விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. திருமக்கோட்டை கிராம கமிட்டி தலைவர் அருணாச்சலம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க.. மாநில பொதுச்செயலாளர் கருப்புமுருகானந்தம், திருவாரூர் மாவட்ட மேற்பார்வையாளர் பேட்டை சிவா,மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர்கலந்து கொண்டனர்.

வாய்க்காலில் கரைப்பு

ஊர்வலம் முக்கிய வீதியின் வழியாக ெசன்று திருமேனி வாய்க்காலில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிகளில் திருமக்கோட்டை போலீசார் செய்திருந்தனர்.


Next Story