சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது


சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது
x
தினத்தந்தி 17 Oct 2023 2:00 AM IST (Updated: 17 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி இட்டேரி பகுதிகளில் தாலுகா போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்ற போது சூதாட்ட கும்பல் தப்பி ஓடியது. போலீசார் அவர்களை சுற்றி வைத்து பிடித்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வடக்கிபாளையத்தை சேர்ந்த தேவராஜ் (வயது 47), மணிகண்டன் (25), நாகராஜ் (49), கொங்குநாட்டான்புதூரை சேர்ந்த கனகராஜ் (29), குள்ளிசெட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (24), பொள்ளாச்சியை சேர்ந்த காளிமுத்து (28), வடுகபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (42), பாரத் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story