கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் - ஒருவர் உயிரிழப்பு


கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல் - ஒருவர் உயிரிழப்பு
x

கோவை நீதிமன்ற வளாகத்தில் 2 பேரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை,

கோவையில் குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த 2 பேரை 4 பேர் கொண்ட அரிவாளால் வெட்டியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கோவையில் குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு 2 பேர் வெளியே வந்தனர். அப்போது அவர்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில் ஒருவர் சம்பவ இயத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story