கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

விக்கிரசிங்கபுரத்தில் கஞ்சா விற்றவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் 3 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த வழக்கில் மேக்கிழார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ஒச்சப்பன் என்பவருடைய மகன் பிரபு (வயது 41) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டர் பெருமாள் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் பிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன் பேரில் பிரபு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.


Next Story