சேலத்தில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
சேலத்தில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சேலம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மங்களம் அருகே உளள லேக்கடி பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 24). கடந்த மாதம் வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலமாக கஞ்சா கடத்தி வந்த அவரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த அபுதாகீரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா மாநகர கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து அபுதாகீரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story