மகாத்மா காந்தி வருகை தந்த இடத்தில் நினைவு ஸ்தூபி


மகாத்மா காந்தி வருகை தந்த இடத்தில் நினைவு ஸ்தூபி
x

பரமக்குடியில் மகாத்மா காந்தி வருகை தந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்க எம்.பி. ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம்

பரமக்குடி

சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி நிதி திரட்டுவதற்காக பரமக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அறிந்த நவாஸ்கனி எம்.பி. அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நினைவு ஸ்தூபி அமைக்க காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக எம்.பி. உறுதி அளித்தார். மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுசாமி, நகர்மன்ற தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மாநில செயலாளர் ஆனந்தகுமார், மாநில பேச்சாளர் ஆலம், பரமக்குடி நகர் செயலாளர் அகமது கபீர், ராஜீவ் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story