குப்பை ெதாட்டியான பி.ஏ.பி. கால்வாய்


குப்பை ெதாட்டியான பி.ஏ.பி. கால்வாய்
x

பி.ஏ.பி.கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருப்பூர்

தளி

பி.ஏ.பி.கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பி.ஏ.பி. கால்வாய்

உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் பி.ஏ.பி.பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் தளி வாய்க்கால் மூலமாக பழைய ஆயக்கட்டு பாசனமும் நடைமுறையில் இருந்து வருகிறது. பாசன நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஏதுவாக பி.ஏ.பி.பிரதான கால்வாய், உடுமலை, பூலாங்கினர் மற்றும் உயர்மட்ட கால்வாய், கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலமாக 4 மண்டலங்களுக்கு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பி.ஏ.பி.கால்வாயின் கரையில் கொட்டப்படும் பல்வேறு வகையான கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது தண்ணீரில் மிதந்து சென்று மடைப்பகுதிகளை அடைத்துக்கொள்கிறது.

கோரிக்கை

அந்த வகையில் கண்ணம நாயக்கனூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் குறுக்கிடும் பி.ஏ.பி. கால்வாயின் கரையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. அவை கால்வாயை முழுவதுமாக ஆக்கிரமித்து வருகிறது. ஒரு சில நாட்களில் 4-ம் மண்டலத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்போது இந்த கழிவுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விளை நிலங்களை பாழ்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இதனால் சாகுபடி பணிகள் பாதிக்கப்படும். எனவே பி.ஏ.பி. கால்வாயில் கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.


Next Story