கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் குப்பை கழிவுகளில் தீ விபத்து - 20 மணி நேரம் போராடி அணைத்தனர்


கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் குப்பை கழிவுகளில் தீ விபத்து - 20 மணி நேரம் போராடி அணைத்தனர்
x

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் குப்பை கழிவுகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை 20 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள நேமலூர் ஊராட்சியில் பழைய கழிவுகளில் இருந்து பல்வேறு மூலப்பொருட்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி தொழிற்சாலை உள்ளது. இந்த தனியார் தொழிற்சாலையில் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குப்பை கழிவுகளை சுமார் 30 அடி உயரத்திற்கு மலை போல குவித்து வைத்து உள்ளனர்.

நேற்று முன்தினம் இந்த கழிவுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமள வென பரவி கொளுந்து விட்டு விடிய விடிய எரிந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு அலுவலர் செந்தில் குமரன் தலைமையில் வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் நேற்று மாலை வரை சுமார் 20 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதுவுமில்லை.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மின் கசிவால் தீ விபத்து எற்பட்டதா? அல்லது குப்பை கழிவுகளில் மர்ம நபர்கள் யாரேனும் தீயை வைத்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story