ஜி.கே.மூப்பனார் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பு
ஜி.கே.மூப்பனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில், காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தி.மு.க.வின் கலைஞர் தமிழ் பேரவை இணை செயலாளர் பழனிவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், நெல்லை சந்திப்பில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜி.கே.மூப்பனார் படத்துக்கு மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story