காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பா.ஜ.க.
மகாத்மா காந்தி ெஜயந்தியை முன்னிட்டு விருதுநகரில் பா.ஜ.க.வினர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் ெரயில் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து கதர் விற்பனைநிலையத்திற்கு சென்று 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கதர் ஆடை வாங்கி கதர் விற்பனையை ஊக்குவித்தனர்.
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி இந்நகர் கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் மாநில, மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகர் காங்கிரஸ் சார்பில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நகர காங்கிரஸ் தலைவர் சங்கர் கணேஷ் தலைமைமையில் மாநில பொது குழு உறுப்பினர் தளவாய்பாண்டியன், வட்டார தலைவர் கணேசன், நகர துணை தலைவர் சிவசுப்ரமணி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ் தலைமையில் மக்கள் நீதி மய்யத்தினர் ெரயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
நூற்பு வேள்வி
காந்தி ஜெயந்தியையொட்டி விருதுநகர் ரெயில் நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் மாலை அணிவித்தார்.
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வோதயா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராட்டையில் நூல் நூற்கும் நூற்பு வேள்வி நடைபெற்றது.