சென்னையில் ரூ.400-ஐ எட்டிய பூண்டு விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி


சென்னையில் ரூ.400-ஐ எட்டிய பூண்டு விலை: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 31 Jan 2024 3:37 AM GMT (Updated: 31 Jan 2024 5:06 AM GMT)

பூண்டு விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

சென்னை,

அன்றாட சமையலில் பயன் படுத்தப்படும் விளை பொருட்களில் ஒன்று பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு அதிகளவில் பயன் படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. வழக்கமாக ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வறட்சி, வெள்ளப்பெருக்கால் பூண்டு விளைச்சல் பாழானதே, விலை உயர்வுக்கு காரணம். புதிய விளைச்சல் வரும் பூண்டின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.


Next Story