காஞ்சிபுரம் அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து: 11 பேர் படுகாயம்
வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டதில் 11 பேருக்கு காயமடைந்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கேஸ் குடோடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடோனில் தீடிரென ஒரு எரிவாயு சிலிண்டர் கீழே விழுந்து வெடித்தாக கூறப்படுகிறது. இதனையெடுத்து அடுத்தடுத்து சிலிண்டர்களும் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இந்த குடோனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 11 பேர் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story