திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்...நெல்லையில் பங்க் உரிமையாளர் வெளியிட்ட அசத்தல் ஆபர்


திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்...நெல்லையில் பங்க் உரிமையாளர் வெளியிட்ட அசத்தல் ஆபர்
x

நெல்லையில், 50 திருக்குறள் ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசமாக வழங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்த‌து.

நெல்லை,

நெல்லை சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர், தனது பெட்ரோல் நிலையத்தில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், 50 திருக்குறள் ஒப்புவித்தால் 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம் என்றும், 30 திருக்குறள் ஒப்புவித்தால் 50 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசம் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து திருக்குறளை ஒப்புவித்து இலவச பெட்ரோல் வாங்கி சென்றனர்.

1 More update

Next Story