எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம்


எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம்
x

சிவந்திபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அம்பை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி என்ற துர்க்கை துரை தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, மாநில பேச்சாளர்கள் இளையகவி, மின்னல் மீனாட்சி, அடையகருங்குளம் பஞ்சாயத்து துணை தலைவர் மதன கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story