ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
திசையன்விளை:
அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பரமேஸ்வரபுரத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, வர்த்தக அணி செயலாளர் அம்மா செல்வகுமார், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், திசையன்விளை நகர செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story