பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்


பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் பொது வினியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் கோரியும், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது வினியோகக்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story