தடையில்லா சான்று பெற்றுசிலைகளை நிறுவ வேண்டும்


தடையில்லா சான்று பெற்றுசிலைகளை நிறுவ வேண்டும்
x
தினத்தந்தி 8 Sept 2023 12:30 AM IST (Updated: 8 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று கலெக்டர் கிராந்தி குமார் கூறினார்.

கோயம்புத்தூர்

கோவை


தடையில்லா சான்று பெற்று விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும் என்று கலெக்டர் கிராந்தி குமார் கூறினார்.


ஆய்வு கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இதற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், ராஜாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-


தடையில்லா சான்று


விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இதையொட்டி சிலை வைக்கும் அமைப்பினர் மாநகர பகுதிகளில் உதவி போலீஸ் கமிஷனரிடமும், மற்ற இடங்களில் சப்- கலெக்டர் அல்லது வருவாய் கோட்டாட்சியரிடம் தடையில்லா சான்று பெற்று இருக்க வேண்டும்.


தனியார் இடத்தில் சிலை வைக்க நில உரிமையாளரிடம் இருந்தும், அரசு புறம்போக்காக இருந்தால் சம்பந்தப்பட்ட துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை துறை ஆகிய அலுவலர்களிடம் இருந்தும் தடையில்லா சான்று பெற்று இருக்க வேண்டும்.


தடை செய்யப்பட்ட பொருட்கள்


சிலை அமைவிடம் தீ தடுப்பு வசதி கொண்டது என தீயணைப்பு அலுவலரிடம் சான்று பெற வேண்டும். நிறுவப்படும் சிலைகள் தூய களிமண்ணால் தயாரிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலிற்கு மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரீஸ், தடை செய்யப் பட்ட வண்ணங்களால் பூசிய சிலைகள் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் தடைசெய்யப்பட்ட பொருட்க ளை கொண்டு சிலைகள் அமைக்கக்கூடாது.


சிலைகளை எளிதில் நீரில் கரையக்கூடிய நச்சு அல்லாத இயற் கை வண்ணங்களை ெகாண்டு தயாரிக்க வேண்டும். ரசாயன சாயங்களை பயன்படுத்தக் கூடாது. சிலை அமைப்பாளர்கள் பந்தல் அருகே தற்காலிக முதல் உதவி மற்றும் அவசரகால மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வழி பாட்டு பகுதிகளை சுற்றி எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை தவிர்க்க வேண்டும்.


அனுமதி இல்லை


நிறுவப்பட்ட அல்லது அமைக்கப்பட உள்ள சிலைகளின் உயரம் தரை தளத்தில் இருந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகே சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.


நான்கு சக்கர வாகனங்கள் மினி லாரி மற்றும் டிராக்டர் ஆகியவற்றில் சிலைகளை கொண்டு செல்ல அனுமதி உள்ளது. மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாகனங்களில் விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல அனுமதியில்லை. விநாயகர் சிலைகளை கொண்டு செல்லும் வாகனத்தில் பயணம் செய்யும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மோட்டார் வாகனச் சட்டம் 1988-க்கு உட்பட்டிருக்க வேண்டும்.


சமுதாய நல்லிணக்கம்


விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட இடங்கள் மற்றும் ஊர்வலமாக கொண்டு செல்லும் பாதைகளில் பட்டாசு வெடிபொருட்களை பயன்படுத்த அனுமதியில்லை. பொது அமைதி, பாதுகாப்பு மற்றும் சமுதாய நல்லிணக்கத்திற்காக வருவாய் துறை, காவல் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறும் நிபந்தனைகளை கடைபிடித்து விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோகிலா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி, போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஆறுமுகம் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story