250 கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்டகம்


250 கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்டகம்
x

பழனி அருகே நடந்த வளைகாப்பு விழாவில், 250 கர்ப்பிணிகளுக்கு பரிசு பெட்டகத்தை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

திண்டுக்கல்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா பழனி அருகே உள்ள தொப்பம்பட்டியில் நடந்தது. இதற்கு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பொன்ராஜ், மாவட்ட குழந்தைகள் நலத்திட்ட அலுவலர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதைத்தொடர்ந்து தொப்பம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் 250 பேருக்கு அரசு சார்பில் பழம், சேலை, சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை அமைச்சர் வழங்கினார். இதேபோல் கர்ப்பிணிகளுக்கான பரிசு பெட்டகம் மற்றும் பேறுகால நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜா மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், தொப்பம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சத்தியபுவனா, துணைத்தலைவர் பி.சி. தங்கம், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஊராட்சி தலைவர் ஈஸ்வரி ராமராஜ், துணைத்தலைவர் பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story